KMTT

கண்டி பல்வகை போக்குவரத்து முடிவிடம்

பிரதானமாக மூன்று பஸ் பாதைகளிலிருந்து 193 பஸ் வழித்தடங்களிலிருந்து தினமும் நாளொன்றுக்கு 5000 ற்கு மேற்பட்ட பஸ் பயணங்களோடு 330000 பயணிகளை கையாளுமென எதிர்பார்க்கப்படுகின்றது. .

கண்டி பல்வகை போக்குவரத்து முடிவிடம் (KMTT)

விளக்கம்

கண்டி பல்வகை போக்குவரத்து முடிவிடம் (KMTT) கண்டியில் தற்போதுள்ள (1) குட்செட், (2) மணிக்கூட்டு கோபுரம், (3) டொரிங்டன் ஆகிய மூன்று பஸ் பயண முடிவிடங்களின் விசாலமான இடைவெளியில் பரவியிருத்தலை, கண்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள கிட்டத்தட்ட மூன்று ஏக்கர் கொண்ட குட்செட் பகுதியில் தற்போதுள்ள பயண முடிவிடத்தை ஒரே கூரையின்கீழ் கொண்டு வருவதன் மூலம் நீக்குவதற்கான கட்டமைப்பொன்றை வழங்குவதற்கானதாகும். மூன்று மட்டங்களாக அமையும் பயண முடிவிடக்கட்டமைப்பு ஒரு நிலத்தடி பாதை மற்றும் ஒரு நடை மேம்பாலம் ஆகியவற்றினால் இணைக்கப்படும்..


பிரதானமாக மூன்று பஸ் பாதைகளிலிருந்து 193 பஸ் வழித்தடங்களிலிருந்து தினமும் நாளொன்றுக்கு 5000 ற்கு மேற்பட்ட பஸ் பயணங்களோடு 330000 பயணிகளை கையாளுமென எதிர்பார்க்கப்படுகின்றது. பஸ் இயக்கங்களை கட்டுப்படுத்துவதற்கும் பஸ் புறப்படும் நேரம் மற்றும் சம்பந்தப்பட்ட பஸ் நிறுத்துக்கட்டத்தின் (Bays) அமைவிடம் ஆகியன தொடர்பான தகவல்களை பயணிகளுக்கு வழங்குவதற்கும் ஐடீ ஐ அடிப்படையாகக் கொண்ட முடிவிட இயக்கும் முறைமைகள் இருக்கும். 5000 பஸ் பயணங்களுள் கிட்டத்தட்ட 2100 பஸ் பயணங்கள் கேஎம்டீடீ யில் பஸ் ஏறும் மற்றும் இறங்கும் நிறுத்து கட்டங்களில் முடிவடையும். மற்ற எல்லா பஸ் பயணங்களும் தரித்து உடன் புறப்படும் முறைக்கு மாற்றப்படும். இங்கு, அவற்றிக்கு பிரயாணிகளை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் மற்றும் பயணத்தின் மற்ற முனைக்கு பயணத்தை தொடர்வதற்கு அல்லது அங்கிருந்து திரும்பி ஆரம்ப இடத்திற்கு வருவதற்கும் நிறுத்து கட்டங்கள் (Bays) இருக்கும், இந்த மாற்று ஏற்பாட்டின் மூலம் நகரினுள் பஸ் நிறுத்துவதற்கான கிராக்கி குறைக்கப்படும். அத்துடன், நிறுத்துமிட வசதிகள் கேஎம்டீடீ யின் உள்ளேயே வழங்கப்படும்.


இந்நிர்மாணத்தோடு, நிறுத்தி உடன் புறப்படுவதற்கான 13 நிறுத்துக்கட்டங்கள் (Bays) பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு 32 நிறுத்துக்கட்டங்கள், பராமரிப்பதற்கு 2 நிறுத்துக்கட்டங்கள், மற்றும் பஸ் இயக்குவதற்கான 94 பஸ் நிறுத்துமிட பிரிவுகள் ஆகியன இருக்கும். அதற்கு மேலதிகமாக முச்சக்கர வண்டிகளுக்கு 40 நிறுத்துமிட பிரிவுகளும் (Slots) தனியார் கார்களுக்கு 40 நிறுத்துமிட பிரிவுகளும் இருக்கும்.


பயணிகள் வசதிகளைப் பொறுத்தவரை, செளகரியம் கழுவுதலறைகள் மற்றும் கழிவறைகள், ஓய்வறைகள், அமரும் பகுதி, பயணச்சீட்டு வழங்கும் பகுதி, பொதுத்தகவல் காட்சிப்படுத்தல் மற்றும் நிலையங்கள், உணவு மற்றும் கொள்வனவுக்கடைகள் ஆகியன இப்பயண முடிவிடத்தில் வழங்கப்படும். பஸ் cruses மற்றும் இயங்குதல் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றுக்கான வசதிகள் இருக்கும். வலது குறைந்த ஆட்களுக்கான வசதிகள் அடங்கலாக பயணிகள் நடமாட்டத்திற்கான படிக்கட்டுகள், மின் ஏற்றிகள், மின்னுயர்த்திகள் ஆகியன இருக்கும்.


புகையிரத வளாகத்திற்கு மேலாக கேஎம்டீடீ ஊடாக பேராதனை வீதிக்கும் வில்லியம் கோபல்லாவ வீதிக்கும் இடையே உயரமான பாதசாரிகள் இணைப்பு இருக்கும். இது இரண்டு வீதிகளுக்குமிடையிலும் கேஎம்டீ மற்றும் புகையிரத நிலயத்திற்குமிடையிலும் இலகுவானதும் குறுகிய தூரத்திலானதுமான பாதையை வழங்கும். இந்த பாதசாரிகள் நடைமேம்பாலம் பயணிகள் கூடம் அமைந்துள்ள கட்டிடத்தின் இரண்டாம் மாடியோடு இணைக்கப்படும்.

உங்கள் யோசனைகள், ஆலோசனைகள் மற்றும் கேள்விகள் எங்களுக்கு அனுப்பவும்.