எங்களை பற்றி
மூலோபாய நகர அபிவிருத்தி திட்டத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ் உருவாக்கப்பட்ட மூலோபாய நகர அபிவிருத்தி திட்டமானது இரண்டாம் நிலை நகரங்களுக்கிடையில் கட்டமைப்புடன் கூடிய போட்டிதிறன், சுற்றுச்சூழல் ரீதியான நீடித்த திறன் மற்றும் நகரங்களுக்கிடையிலான நல்லிணைப்பை பேணும் நோக்குடன் நிலைபேறுடைய பொருளாதார அபிவிருத்தி மற்றும் செழிப்பான வளர்ச்சியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு முயற்சியாகும். ஒவ்வொரு நகரத்திலும் இந்த திட்டமானது ஒருங்கிணைந்த நகர்ப்புற சேவைகள் மேம்பாடு மற்றும் பொது நகர்ப்புற மேம்பாடு போன்ற இரண்டு முக்கிய பரந்த பிரிவுகளை இலக்காகக் கொண்டுள்ளது.