தர்மசோக்கா மாவத்தை

தர்மசோக்க மாவத்தை மற்றும் லேவெல்ல - பூவெளிக்கட வீதி அபிவிருத்தி

விளக்கம்

தர்மசோக்க மாவத்தை - லேவெல்ல -பூவெளிக்கட வீதி தற்போது ஒரு தரக்குறைவான இருவழி வீதியாக உள்ளது. அது 3.5 மீற்றர் அகலமான இருவழியாக தரமுயர்த்தப்படும். உத்தேச வீதி அபிவிருத்தி செயற்பாடு பொருத்தமானதும் தேவையானதுமான இடங்களில் வடிகாலமைப்பு முறைமையும் வீதி ஓரத்தையும் அபிவிருத்தி செய்யும். கண்டி நகரின் வடக்கு மற்றும் வடகிழக்குத் திசையில் அமைந்துள்ள இவ் DLB வீதி பல இணைப்பு வீதிகளை கொண்டுள்ளது. இவ்வீதி கங்கேவத்த கோறளை பிரதேச செயலகப் பிரிவை (DSP ) ஊடறுத்துச் செல்கிறது. DLB வீதியின் மொத்த நீளம் கிட்டத்தட்ட 3.6 கி.மீ. எனினும், இது இரண்டு பிரிவுகளாக பிரிகிறது, அதாவது 2.825 கி.மீ நீளம் கொண்ட லேவெல்ல -பூவெளிக்கட வீதி (B 550). B 069 பிரிவு கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் (A -09) றேகடே சந்தியில் தொடங்கி செம்பதி பிராமிகுளத்துங்க மாவத்தை சந்தியில் முடிவடைகிறது. B 550 பிரிவு செம்பதி பிராமிகுளத்துங்க மாவத்தை சந்தியில் தொடங்கி கண்டி - மஹியங்கனை-பதியத்தலாவ வீதியில் (A 026) முடிவடைகிறது.


கண்டி நகரில் வாகன நெருக்கடி வீதியைப் பயன்படுத்துவோருக்கு பல நேரடி மற்றும் மறைமுக தாக்கங்களை ஏற்படுத்தும் அடிக்கடி நிகழும் ஒரு பிரச்சினையாகும். நகரை கடந்து செல்லும் கனரக வாகனங்கள் வாகனப்போக்குவரத்து பிரச்சினையை மேலும் மோசமாக்குகின்றன. அதனால் கண்டி நகரில் வாகனப்போக்குவரத்து பிரச்சினையை குறைப்பதற்கு DLB வீதி ஒரு மாற்று வீதியாகும். மேலும், வீதியின் தற்போதய நிலைமை மிகவும் மோசமானதாக இருப்பதோடு, இரு வழிகளின் அகலம் போதாதுள்ளது. வீதியில் வாகன நெரிசல் அடிக்கடி அவதானிக்கப்படுகிறது. எனவே, இவ்வீதி போதுமான வடிகாலமைப்பு, கார் நிறுத்துமிட வசதி மற்றும் பாதசாரிகளுக்கான போதுமான வாய்ப்பு ஆகியவற்றோடு தரமுயர்த்தப்படவேண்டும். வீதி அபிவிருத்தி இறுதியில் வீதிப் பாதுகாப்பு நடவடிக்கையை அதிகரிக்கும்.