ஜோர்ஜ் டீ சில்வா பூங்கா

ஜோர்ஜ் டீ சில்வா பூங்காவை புனரமைத்தல் .

திட்டங்கள் தெரிவிப்பு

ஜோர்ஜ் டீ சில்வா பூங்காவை புனரமைத்தல் .


வகை

நகர தரமுயர்த்தல்


அமைவிடம்

கண்டி - ஜோர்ஜ் டீ சில்வா பூங்கா


நிறைவுறு ஆண்டு

2019


செலவு

இ .ரூ 75 மில்லியன்

விளக்கம்

ஜோர்ஜ் டீ சில்வா பூங்கா மத்திய மாகாணத்தில் உள்ள உலக மரபுரிமை நகரான கண்டி மாநகரின் மத்தியில் அமையப்பெற்றுள்ளது. அதன் எல்லைகள் வடக்கே தளதா வீதி, தெற்கே டொரிங்டன் வீதி, எகலபொல குமாரி ஹாமி வீதி, கிழக்கே சமதர ஒழுங்கை ஆகியனவாகும். 3420 ச.மீ பரப்பளவைக்கொண்ட இப்பூங்கா பகல் வேளைகளில் சூழவும் வாகன நெரிசல் நிறைந்து காணப்படுவதோடு, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் இரைச்சல் மிக்கதாக உள்ளது. எனினும், இப்பூங்காவின் சிறிய திறந்தவெளி இந்நகரின் மத்தியில் ஓய்வு கொள்வோருக்கு நிம்மதியளிக்கும் புதிய காற்றை கொண்டு வருகிறது. இப்பூங்காவைச் சுற்றிலும் பிரதான வீதிகள் இருக்கும் அதேவேளை, பூங்காவின் இரு மருங்கிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்கள் அமைந்துள்ளன. மொட்டைமாடி கார் நிறுத்துமிடம் இதன் வடமேற்கு பக்கமாக அமைந்துள்ள அதேவேளை, பொதுநூலகம் தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது. ஜோர்ஜ் டீ சில்வா பூங்காவின் கூரை பொதுச்சந்தை அமைவதற்கு உதவுகிறது. அது, தமது பொருட்களை ஒப்பீட்டளவில் குறைந்த விலைக்கு விற்கும் சிறு வியாபாரிகளைக் கொண்ட பிரசித்தமான வியாபார மையமாகும்.


இப்பூங்கா அதன் நுழைவாயிலில் உள்ள படிக்கட்டுகள், குகையிலிருந்து சந்தைக்கான படிக்கட்டுகள் மற்றும் மொட்டைமாடி கார் நிறுத்துமிடம் மற்றும் நூலகம் ஆகியவற்றுக்கான ஒரு ஒடுங்கிய பாலம் ஆகிய வழிகளைக் கொண்டுள்ளது. இவ்வழிகள் ஜோர்ஜ் டீ சில்வா பூங்காவை ஒரு முக்கிய பாதசாரிகள் கடவையாக ஆக்குகின்றன.


இவ்வுப கருத்திட்டம் இப்பூங்காவின் தற்போதைய தோற்றத்தை ஒரு கவர்ச்சிகரமான நகரப்பூங்காவாக ஆக்க முயல்வதோடு, பூங்காவைச் சுற்றிலுமுள்ள நிலத்தோற்றத்தை மேம்படுத்தி கண்டி நகரின் கட்புலக்காட்சியை மேம்படுத்த முனைகிறது. இப்பகுதி உரியமுறையில் ஒளியூட்டப்பட்டதும் இரவு வேளையிலும் நகருக்கு வருகை தருவோர் சுற்றிலுமுள்ள நகர்ப்பகுதியை பார்த்து ரசிக்கலாம்.