யாழ்ப்பாணம் நகரம்

யாழ்ப்பாண நகர் பகுதியில் நகரத் தலையீடுகள்

யாழ்ப்பாண அபிவிருத்தி பிரிவு சிவில் மோதல்களின் காரணமாக (மக்கள்) அனுபவித்த 03 தசாப்தகால துன்பங்களுக்கு பின்னர் நகரை தரமுயர்த்துவதற்கு முக்கியமானதாக கருதப்படும் மூன்று அபிவிருத்திப் பிரிவுகளின் கீழ் இனங்காணப்பட்ட முதலீடுகளுக்கு உறுதுணை புரியும்.

இந்த உபபிரிவின் கீழ் முன்மொழியப்படும் அபிவிருத்திகள் கிராமிய மற்றும் நகர வீதி இணைப்புகளை வழங்குவதன் மூலம் யாழ்ப்பாண மாநகரசபைப் பிரதேசத்திலும் யாழ்குடாநாட்டிலும் இணைப்புகளை மேம்படுத்த எதிர்பார்க்கின்றது.


இந்த உபபிரிவு ஒரு பிரதான பேருந்து தரிப்பிடம் மற்றும் வாகன நிறுத்துமிட வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கும் ஒரு விரிவான பொதுப்போக்குவரத்து மற்றும் வாகனப்போக்குவரத்து முகாமைத்துவ மூலோபாயமொன்றை விருத்தி செய்வதையும் ஆதரிக்கும்.

இந்த உபபிரிவின் கீழ் முன்மொழியப்படும் அபிவிருத்திகள்; யாழ்ப்பாண மாநகர பிரதேசத்தில் உள்ள வடிகால் வலையமைப்பை மீளமைத்தல் மற்றும் தற்போதைய மாநகர பிரதேசம் மாத்திரமின்றி எதிர்காலத்தில் விரிவாக்கப்படுவதெற்கென இனங்காணப்பட்டுள்ள பிரதேசங்களும் அடங்கலாக, யாழ்ப்பாண நகர பிரதேசத்தின் வடிகாலமைப்பு தொடர்பான விரிவானதொரு ஆய்விற்கு ஆதரவளித்தல், பருவ மழை காலங்களில் நகர் மழைவெள்ளத்தில் ஆழ்வதை தடுப்பதை உறுதி செய்யும் ஒரு பாரிய வடிகாலமைப்பு திட்டத்தை தயாரித்தல் ஆகியவற்றை உள்ளடக்கும்.


இவ் உபபிரிவு கருத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் நகரின் முக்கியப்பகுதிகள் வெள்ளத்தில் ஆழ்வதை தடுக்க உதவும் பாரிய வடிகாலமைப்பு திட்டத்தில் இனங்காணப்பட்ட முன்னுரிமை வேலைகளுக்கும் நிதியளிக்கும்.

இந்த உபபிரிவின் கீழ் முன்மொழியப்படும் அபிவிருத்திகள்; நகரில் இனங்காணப்பட்ட வீதிப்பிரிவுகளில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் அபிவிருத்தி செய்யப்பட்ட வீதித்தோற்றங்களில் தொடங்கி பலவித நகர தரமுயர்த்தல், நகர பிரதேசத்தில் தற்போதுள்ள பொழுதுபோக்கு பகுதிகள் மற்றும் பொது வெளியிடங்களை தரமுயர்த்தல், பொது கழிவறைகள் மற்றும் சமூகநிலையங்கள் போன்ற பொதுவசதிகளையும் சேவைகளையும் கலாசார ரீதியாக மேலும் சிறப்பானதொரு மீளமைப்பிற்கு அபிவிருத்தி செய்தல் மற்றும் நகரின் மத்தியில் அமைத்துள்ள பழைய கச்சேரி கட்டிடம் போன்ற யாழ்ப்பாணத்தின் கலாசார மரபுரிமைத்தளங்களை காலத்திற்கேற்ற வகையில் மீளப்பயன்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கும்.


இவ் உபபிரிவு யாழ்ப்பாண தீபகற்ப அபிவிருத்தி மூலோபாயத்திற்கும் நிதியளிக்கும்.

இவ் உபபிரிவினது, யாழ்ப்பாண மாநகர சபை தேவைப்படும் அபிவிருத்திகளை ஆராய்ந்து இனங்காண்பதற்கு அதற்கு ஆலோசனை சேவை வழங்குவதன் மூலம் மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்ட சொத்துக்களை பராமரிப்பதற்கு தேவையான இயந்திரங்களின் கொள்வனவிற்கு நிதியளிப்பதன் மூலமும் அத்துடன் யா.மா. சபை பணியாள் தொகுதியினருக்கு பயிற்சியளிப்பதன் மூலம் யாழ் மாநகர சபை தனது பிரசைகளுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்குவதற்கும் அத்துடன் மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்ட சொத்துக்களை மிகச்சிறந்த முறையில் பராமரிப்பதற்கும் அதன் திறன் விருத்திக்கு நிதியளிக்கும்.;