கண்டி ஏரியைச் சுற்றிய நடைபாதை

கண்டி வாவிக்கரை நடைபாதை மேம்படுத்தல்

திட்டம் தெரிவிப்பு

கண்டி வாவிக்கரை நடைபாதை மேம்படுத்தல்


வகை

நகர தரமுயர்த்தல்


அமைவிடம்

கண்டி வாவியைச் சுற்றி


நிறைவுறு ஆண்டு

2020


செலவு

இ .ரூ 450 மில்லியன்

விளக்கம்

கண்டி வாவியைச் சுற்றி நடைபாதையை மேம்படுத்துதல் நகர தரமுயர்த்தலின் கீழ் வரும் SCDP இன் செயற்பாடுகளில் ஒன்றாகும். அதன் எண்ணக்கரு தயாரித்தலின் ஆரம்பக் கட்டத்தில் இக்கருத்திட்டம் ஏரியைச் சுற்றிய நடைபாதை வடக்கு மற்றும் ஏரியை சுற்றிய நடைபாதை தெற்கு என இரு பொதிகளாகப் பிரிக்கப்பட்டது.


எனினும், அதே இடத்தில் அமுலாக்கப்பட வேண்டியிருந்த கண்டி கழிவு நீர் முகாமைத்துவ கருத்திட்டத்தின் செயற்பாட்டைக் கருத்திற் கொண்டு, இது இரண்டு பிரிவுகளாக அமுல்படுத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பிரிவு I Y சந்தியிலிருந்து குயின்ஸ் பாத் வரை செல்கிறது. (செயின் ஏ .ஐ 0.00 ,லிருந்து 2+789 வரை) , இதன் மொத்த நீளம் 2.789 கி.மீ . கருத்திட்டத்தின் பிரிவு II (செயின் ஏ .ஐ 2+789 லிருந்து வரை) மொத்த நீளம் 0.399, இது குயின்ஸ் பாத்திலிருந்து Y சந்தி வரையான தூரத்தை உள்ளடக்கும்.