மெத எல புனரமைப்பு

மெத எல புனரமைப்பு

கருத்திட்ட தகவல்

மத்திய கால்வாய் (மெதஎல) புனரமைப்பு


வகை

வடிகாலமைப்பு புனரமைப்பு


அமைவிடம்

கண்டி


நிறைவுறு ஆண்டு

2018


செலவு

இ .ரூ 700 மில்லியன்

விளக்கம்

மத்திய கால்வாய் (மெதஎல) புனரமைப்பு நகரின் பிரதான வடிகாலமைப்பு கட்டமைப்பு மற்றும் வெள்ளக்கட்டுப்பாட்டு முறைமை ஆகியவற்றின் அபிவிருத்திக்காகவும் கண்டி மாநகர சபை தனது சேவைகளை முகாமைத்துவம் செய்யவும் வழங்கவும் அதன் ஆற்றலை மேம்படுத்துவதற்காகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. அது, (அ ) தொடர்பு படுத்தப்பட்ட ஓடை மேற்பகுதி (ராஜா பிகில்ல மற்றும் ஹீல்பன் கந்துர ) புனரமைப்பு, தற்போதுள்ள அழுக்குத் தடுப்புகளின் ( கீழ் மஹாமாய மற்றும் கீழ் செம்மதகு) புனரமைப்பு மற்றும் புதிய அழுக்குத்தடுப்புக்களின் ( மேல் செம்மதகு மேல் ஹில்வூட் மற்றும் மேல் மஹாமாய) நிர்மாணம் ஆகிய வற்றை உள்ளடக்கும் வடிகாலமைப்பு மேம்பாட்டிற்கான ஒரு பெரிய செயற்பாட்டின் பகுதியாகும்.


இக்குறிப்பிட்ட உப கருத்திட்டத்தின் கீழ் பின்வரும் நடவடிக்கை முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ளது.


• கண்டி நகர வடிகாலமைப்பு க் கால்வாய் மெதஎலவின் புனரமைப்பு


இவ் உப கருத்திட்டம் குறிப்பாக இக்காலவாய் பாய்ந்தோடும் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் மக்கள் தொகை அடங்கலாக நகரின் மொத்த சனத்தொகையான 108,000 பேருக்கும் மதிப்பிடப்பட்ட 350,000 பயணிகளுக்கும் நேரடியாக பயனளிக்கும். மாவட்ட மக்கள் தொகையான 1.37 மில்லியனபேர் மறைமுக பயனாளிகளுள் அடங்குவர். பயன்பெறும் மக்கள் தொகையினர் பல்லின, பல்மதம் சார்ந்தவர்களாவர்.