மற்றும் கப்பு

மோதஎல மற்றும் கெப்புஎல புனரமைப்பு

கருத்திட்டத் தகவல்

மோதஎல மற்றும் கெப்புஎல புனரமைப்பு


வகைகள்

வடிகாலமைப்பு மேம்படுத்தல் / வெள்ள தணிப்பு


அமைவிடம்

காலி


நிறைவுறு ஆண்டு

2019


செலவு

இல ரூபா 544.00 மில்லியன்

விளக்கம்

காலி மாநகர சபைப் பிரதேசத்தில் வெள்ளத்தடுப்பு மற்றும் வடிகாலமைப்பை மேம்படுத்தல் மற்றும் நகர தரமுயர்த்தல் ஆகியன கருத்திட்ட பங்காளர் நிறுவங்களுக்கான திறனைக் கட்டியெழுப்புதல் மற்றும் தொழில் நுட்ப உதவி ஆகியவற்றை உள்ளடக்கிய காலி நகரப் பிரதேச நகர செயற்பாட்டில் உள்ள பிரதான கருத்திட்ட அம்சங்களுள் ஒன்றாகும். காலி மாநகர பிரதேச வடிகாலமைப்பு முறைமை பெரிய மற்றும் சிறிய அளவு திறந்த கால்வாய்களின் ஒரு வலையமைப்பையும் சதுப்பு நிலங்களையும் உள்ளடக்கியுள்ளது. நகரின் வடிகால் வலையமைப்பு பிரதானமாக மூன்று ஓடைகளை கொண்டுள்ளது. மொரகொடஎல, மோதஎல மற்றும் கெப்புஎல. அதேவேளை, மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தினால் நிறுவகிக்கப்படும் மொரகொடஎல தவிர வடிகால் வலையமைப்பு காலி மாநகர சபையினால் நிறுவகிக்கப்படுகின்றது.


இவ்வோடை வீதியோர காண்களிருந்து வரும் நீர் சென்று விழும் குறுக்குக் காண்களிருந்து மிகை வெள்ள நீரை கடலுக்குக் கொண்டு செல்கிறது. இவ்வோடைகளில் உள்ள நீர் நகர மத்தியிலிருந்தும் குடியிருப்பு பகுதிகளிலிருந்தும் வரும் கழிவு நீர் மற்றும் திண்ம மற்றும் திரவ கழிவு ஆகியவற்றினால் மாசுபடுத்தப்படுகின்றது. காலி வடிகாலமைப்பு முறைமை மோசமாக பராமரிக்கப்படுகின்றது; ஓரளவுதான் கரைகட்டப்பட்டுள்ளது; பல பகுதிகளில் மழை நீரை வெளியேற்றுவதற்கு போதுமான கொள்திறன் உள்ளது. இருக்கும் மழை நீரைத் தேக்கிவைக்கும் பகுதிகளும் காணி நிரப்புதல் மற்றும் வீடுகள் மற்றும் வர்த்தக கட்டிடங்களின் நிர்மாணிப்பு ஆகியன காரணமாக துரிதமாக அருகிவருகின்றன.