மொரகொடஎல மற்றும் அதன் குறுக்கு ஓடைகளின் அபிவிருத்தி

கருத்திட்ட தகவல்

மொரகொடஎல மற்றும் அதன் குறுக்கு ஓடைகளின் அபிவிருத்தி


வகைகள்

வடிகாலமைப்பு அபிவிருத்தி / வெள்ளக்கட்டுப்பாடு


அமைவிடம்

காலி


நிறைவுறு ஆண்டு

2019


செலவு

இல. ரூபா 844.00 மில்லியன்

விளக்கம்

மொரகொடஎல குறுக்கு வடிகால்கள் உத்தேச புனரமைப்பு - பொதி அ , ஹீன் எல , ஹீன் எல குறுக்கு வடிகால் 1(ஹீன் எல CD 1) மற்றும் ஹீன் எல குறுக்கு வடிகால்-2 (ஹீன் எல CD 2) ஆகிய மூன்று வடிகால்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு திறந்த கால்வாய் ஆகும். அக்மீமன பிரதேசச் செயலகப் பிரிவில் தொடங்கும் ஹீன் எல கடவசந்தர பிரதேசச் செயலகப்பிரிவின் எத்தலிகொட தெற்கு , மக்குளாவ மற்றும் மிலிதுவ கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் ஊடாக பாய்கிறது. ஹீன் எலயின் ஒரு பகுதி (ஏறத்தாழ 609 மீற்றர் )அக்மீமன பிரதேசச் செயலக பிரிவில் உள்ளது. அக்மீமன மற்றும் கடவசந்தற பிரதேச செயலக பிரிவுகளிலிருந்து வரும் மழை நீர் மற்றும் கழிவு நீர் இதில் கலக்கின்றது. ஹீன் எலவிற்கு குறுக்கே மூன்று பாலங்கள் உள்ளன. பாலத்தின் தற்போதைய அளவுகள் கால்வாய் நீர் எளிதாக பாய்ந்தோடுவதற்கு போதுமானவையாக உள்ளது.


ஹீன் எல நீரேந்துப் பகுதி ஹீன் எல CD1 மற்றும் ஹீன் எல CD 2 - அதிகரித்த அபிவிருத்திச் செயற்பாடுகள் காரணமாக விரைவாக மாற்றமடைகிறது. நிர்மாண நோக்கங்களுக்குப் பொருத்தமில்லாத சதுப்பான தாழ்நிலப்பகுதி காணி நிரப்புதல் மூலம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்நீரேந்துப் பகுதி அதன் நீரை தேக்கிவைக்கும் கொள்திறனை இழக்கிறது. கட்டுப்படுத்தப்படாத காணி நிரப்புதலின் விளைவாக, மழைநீர் ஊடுறுவல் குறைவடைந்து, நீர் பாய்ந்தோடல் துரிதமாக நிகழ்கிறது. எனவே,தற்போதுள்ள கால்வாய் குறைவான மழைவீழ்ச்சிகளின் போதுகூட வெள்ள நீரை காவிச்செல்வதற்கு போதுமானதாக இல்லை. இது காலப்போக்கில் பெரு வெள்ளத்திற்கு இட்டுச் செல்கிறது. கால்வாய் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இக்கால்வாய் மக்கள் தொகைமிக்க, நகரமயப்படுத்தப்பட்ட பகுதியூடாக பாய்வதால் அது எளிதாக மாசடைகிறது. பிளாஸ்டிக் பைகள், தகரங்கள் மற்றும் போத்தல்கள் போன்ற அழுகா மாசுபடுத்தும் பொருட்கள் நீர் தாராளமாக பாய்ந்தோடுவதை தடுக்கும் அதேவேளை, கால்வாயின் நீர் காவிச்செல்லும் கொள்திறனையும் குறைக்கின்றது. கால்வாயின் கரைநெடுக வளரும் தாவரங்களும் எளிதான நீர் பாய்ந்தோடலை தடுக்கின்றன. எனவே, கால்வாயை முறையாக பராமரித்தல், நீர் தேங்கி நிற்கும் பகுதிகளைப் பாதுகாத்தல், வடிகால் கரைகளை மேம்படுத்தல் மற்றும் கால்வாய் நீர் கொள்திறனை அதிகரித்தல் ஆகியன வெள்ளத்தை குறைப்பதற்கு இன்றியமையாதனவாகும்.