எங்கள் வேலை

கண்டி நகர் பகுதியில்;; இணைப்பு நிலையை மேம்படுத்தவும், கணிசமான அளவு நகர மாற்றத்தை அடையவும், பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணைபுரியவும் அத்துடன் பின்வரும் நடவடிக்கைகள் மூலம்; கண்டி நகர் பகுதியின் பொதுவான வாழ்வதற்குக்குகந்த தன்மையையும் முதலீட்டு கவர்ச்சியையும் மேம்படுத்தவும்; கண்டி நகர் பகுதியில் முன்னுரிமை உட்கட்டமைப்பு முதலீடுகளுக்கு உறுதுணை புரிவதை இக்கருத்திட்டத்தின் நகரத் தலையீடுகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.

வாகனப் போக்குவரத்தை மேம்படுத்தல்

வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் பத்திரமாக பயணிப்பதற்கான வீதிப் புனரமைப்புகள் : நகர மத்தியில் பஸ்களின் அளவுக்கதிகமான நெரிசலைக் குறைப்பதற்கு பொதுப் போக்குவரத்து வலையமைப்பிற்கான மேம்படுத்தல்கள;> ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட பல் - முறை போக்குவரத்து முக்கிய மையத்தை நிறுவுதல்;> நகருக்கு வெளியே பொருத்தமான இடங்களில் போக்குவரத்துக்கு வசதிகள், திருத்தியமைக்கப்பட்ட ஒரு பஸ் வலையமைப்பு, மேம்படுத்தப்பட்ட சேவைகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பிரதான வழித்தடங்களில் பஸ் முன்னுரிமை நடவடிக்கைகள் முதலிய நகரின்; முக்கிய போக்குவரத்து உட்கட்டமைப்புக்களின் மீள் ஒழுங்கமைத்தலை வேண்டி நிற்கின்றன. வீதியோர கார் நிறுத்துமிடங்களை வீதிக்கு அப்பால் உள்ள வசதிக்கூடங்களுக்கு மாற்றுதல்: போக்குவரத்து முகாமைத்துவ ஆட்சியொன்றை நிறுவுதல் மற்றும் நகரினுள் பொதுப் போக்குவரத்துக்கும் பாதசாரிகளுக்கும்; முன்னுரிமையளித்தல் போன்ற பாதசாரிகள் நேயத்தின் மேம்பாட்டிற்கான வாகனப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படலாம். உள்;வீதிகள்; மற்றும் பொதுப் போக்குவரத்து உட்கட்டமைப்புக்கள்; ஆகியவற்றிலான முதலீடுகளுக்கு வாகனப் போக்குவரத்து முகாமைத்துவ;த் திட்டங்களினால் ஆதரவளிக்கப்படும்.

கண்டி மாநகர நீர் வழங்கல் முறைமை - மேம்படுத்தல் மற்றும் புனரமைத்தல்

கண்டி மாநகர நீர் வழங்கல் முறைமை தற்போது கண்டி மாநகரப்பகுதியின் தேவையை பூர்த்தி செய்ய முடியாதிருப்பதோடு, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை (NWSDB) வசதி ஏற்பாடுகளினால் குறைநிரப்புச் செய்யப்படுகின்றது. மேலும், கண்டி மாநகர வசதியேற்பாடுகள் நன்கு முகாமைத்துவம் செய்யப்படினும், 1980 களின் ஆரம்பப் பகுதியில் மேம்படுத்தப்பட்ட பழமையடையும் உட்கட்டமைப்புக்களைக் கொண்டுள்ளது. இன்று விநியோக வலையமைப்பு அடிக்கடி வெடிப்புறுதல், கசிவு ஆகியவற்றை அனுபவித்து, கணிசமானளவு வருமானமற்ற நீர் வழங்கலுக்கு (NRW) (விரயத்திற்கு) காரணமாக அமைகிறது. எனவே நீர் வழங்கலை அதிகரிப்பதற்கும் அதன் சேமிப்பு திறனை மேம்படுத்தவும் கெட்டம்பேயிலும் துணுமடவலயிலும் அமைந்துள்ள உள்வாங்கல் மற்றும் சுத்திகரிப்பு பொறிகளை புனரமைப்பதற்கும், NRW ஐ குறைக்குமுகமாக தெரிவு செய்யப்பட்ட இணைப்புகள், பம்பிங் மெயின்கள் மற்றும் விநியோக குழாய்கள் ஆகியவற்றை மாற்றுவதற்கும்; ஆலோசனை முன்வைக்கப்படுகின்றது. முறைமையின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கான ஏனைய கட்டமைப்பு சாராத நடவடிக்கைகளும் அறிமுகப்படுத்தப்படும்.

வடிகால் புனரமைப்பு

நகருக்கு ஒரு திறந்த வாய்க்கால் மற்றும் மழை நீரை நகரிலிருந்து ஒரு திறந்த ஓடைக்கு கொண்டு செல்வதற்காக 150 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட, செங்கல்லிலான பக்கச்சுவர் கொண்ட நிலத்தடி குகை ஆகியன மூலம் வடிகால் சேவை கிடைக்கிறது. பொது மக்களுக்கு ஓர் அச்சுறுத்தலாக அமையும் இந்நிலத்தடி வடிகாலமைப்பு முறைமை அடிக்கடி சேதமைடைவதன் காரணமாக, மழைநீர் வடிகாலமைப்பு முறையின் புனரமைப்பும் பலப்படுத்தலும் துரிதப்படுத்தப்படும்.

நகர தரமுயர்த்தல்

நகரின் முக்கிய பகுதிகளை துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கான மூலோபாயத்திட்டம், கட்டம்கட்டமான அணுகுமுறையொன்றைப் பயன்படுத்தி அமுல்படுத்துவதற்கான நகர தரமுயர்த்தல் தலையீடுகளை தெரிவு செய்வதற்கான அடிப்படையாக பயன்படுத்தப்பட்டது. இவை நகரினுள்ளும் ஏரியைச் சுற்றியும் சூழ உள்ள பகுதிகளிலும் பாதசாரிகள் வலையமைப்புக்களை மீள ஒழுங்கமைத்து மேம்படுத்துதல், பொது வெளியிடங்களை உருவாக்குதல் மற்றும் வாகனப்போக்குவரத்தை மேம்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கும்.. இப்பகுதிவாழ் மக்களும் வருகை தருவோரும் அனுபவித்து மகிழக்கூடிய கலாசார மற்றும் பாரம்பரிய பயன்களின் அடிப்படையில் அமைந்த கவர்ச்சிமிகு பொது வெளியிடங்களையும் கட்டிடங்களையும் உருவாக்குவதன் பொருட்டு முக்கிய பகுதிகளில் உள்ள சிறு சிறு காணித்துண்டுகளையும் கட்டிடங்களையும் பெரியவனாக மீள ஒழுங்கமைப்பதன் மூலம் கண்டி நகர மத்தியின் ஒட்டுமொத்த நகர் சூழலை மேலும் மேம்படுத்திடுவதற்கும் மாற்றியமைப்பதற்குமான வாய்ப்புகளும் உண்டு.. இம்முதலீடுகளுக்கு மேலும் வலுசேர்ப்பதற்கும் எதிர்கால தலையீடுகளுக்கு வழிகாட்டுவதற்கும் முக்கிய பகுதிகளுக்கான விளக்கமான நகர அபிவிருத்தித் திட்டங்களையும் நகர் பகுதிக்கான ஒன்றிணைந்த பாரிய திட்டமொன்றையும் விருத்தி செய்வதை இக்கருத்திட்டம் ஆதரிக்கும். கண்டி அதன் நகரமத்தியிலும் கோயிலினுள்ளும் மாளிகை வளாகத்திலும் வரலாற்று சிறப்புமிக்க பல கட்டிடங்களையும் சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது. (அஞ்சல் அலுவலக கட்டிடம் மற்றும் போகம்பறை சிறைச்சாலை முதலியன) எனினும், நகரமயமாக்கலின் அழுத்தங்கள் அவற்றில் தாக்கங்களை ஏற்படுத்தும் அதேவேளை, பல கட்டிடங்கள்;> குறிப்பாக நகர மத்தியில் அமைத்துள்ளவை ஒரு சிதைவுறும் நிலையில் உள்ளன. தெரிவு செய்யப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்களும் சிறப்பம்சங்களும் இக்கருத்திட்டத்தின்கீழ் காலத்திற்கேற்ற மீள்பவனைக்காக மீளமைக்கமுடியும். இக்கட்டிடங்களை சுற்றியுள்ள வீதிகளினதும் பொது வெளியிடங்களினதும் தரத்தை மேம்படுத்துவதில் ஒரு பங்கு வகிக்கமுடியும். இக்கட்டிடங்களை புனரமைத்தல் முக்கிய பகுதிகளுக்கான நகர அபிவிருத்தித் திட்டம் மற்றும் நகர் பகுதிக்கான ஒன்றிணைந்த பாரிய திட்டம் ஆகியவற்றின் ஒரு பகுதியாகவும் அமையும்.


உப திட்டங்கள்

காலி அப்பகுதியின் பொருளாதார அபிவிருத்திக்கான ஓர் அடித்தளமாக மட்டுமன்றி, வாழ்வதற்கான தன்மை கொண்ட மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு விறுவிறுப்பான கடற்கரை நகரமாகவும் கருதப்படுகின்றது. இப்பிரிவு காலி நகர்ப்பகுதியின் நகர் சூழலை பாதுகாப்பதன் மூலமும் அபிவிருத்தி செய்வதன் மூலமும் அதன் வாழ்வதற்கான தன்மையை மேம்படுத்துவது, உட்கட்டமைப்பிலும் சேவைகளிலுமான முன்னுரிமை முதலீடுகளுக்கு உறுதுணைபுரிவது, முதலீட்டுக்கான கவர்ச்சியை அதிகரிக்குமுகமாக நகரின் பணிகளை ஒழுங்கமைப்பது, நகர பொது வெளியடங்களை மேம்படுத்துவது மற்றும் காலி நகர்ப் பகுதியின் பொருளாதார வளர்ச்சிற்கேற்ப கணிசமான நகர மாற்றத்தை எய்துவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளது.

வடிகாலமைப்பு அபிவிருத்தி / வெள்ளக்கட்டுப்பாடு

காலியில் ஒரு வருடாந்த நிகழ்வான வெள்ளப்பெருக்கு பெரும்பாலும் மோசமான வடிகாலமைப்பு காரணமாக ஏற்படுவதாகும். 2003 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட பெருவெள்ளம் இப்பகுதியில் பெய்த கடும்மழை காரணமாக ஏற்பட்டதாகும்;. குளிகள் மூலம் நீரை அகற்றும் காணிகள் அவற்றின் மேடு காரணமாக இயல்பான நீர் வழிந்தோடலை தடுக்கும் அதேவேளை, வடிகாலமைப்பு முறைமையும் மாசடைந்து, பராமரிப்பின்மை காரணமாகவும் விழுந்த தென்னை மரங்களின் பகுதியளவு சிதைந்த பாகங்கள் மற்றும் குப்பை கொட்டுதல் மற்றும் மண்டிக்கிடக்கும் புற்கள் ஆகியவற்றின் காரணமாகவும் வெள்ளநீரை கடலுக்கு கொண்டு செல்ல முடியாதுள்ளது. . பல இடங்களில் வாய்க்கால்களின் கரைகள் பாதுகாப்பற்றதாகவும் உறுதியற்றதாகவும் இருப்பதோடு அங்கு சட்ட விரோத குடியிருப்பாளர்கள்


குடியேறியுள்ளனர். பல இடங்களில் அணைகள்; (Gabions) மோசமாக வடிவமைக்கப்பட்டு மிகப்பெரியதாகவும் உறுதியற்றதாகவும் உள்ளன. பொதுவாக வாய்க்காலின் குறுக்குப்பகுதிகள் உரிய, நம்பகமான முறையில் வெள்ளநீரை வெளியேற்றுவதற்கு பொருத்தமற்றனவாக உள்ளன. பிரதான வாய்க்கால்களுக்கு நீரைக் கொண்டுவரும் வடிகால்களும் ஏனைய இடங்களில் உள்ள குறுக்கு வடிகால்களும் ஓரளவே கரைகட்டப்பட்டிருப்பதோடு, மேலதிக மழைநீரை உரிய முறையில் கொண்டு செல்வதற்கான கொள்ளளவின்றி மோசமாக பராமரிக்கப் படுகின்றன.

நகர தரமுயர்த்தல்

இவை நகரினுள்ளும் ஏரியைச் சுற்றியும் சூழ உள்ள பகுதிகளிலும் பாதசாரிகள் வலையமைப்புக்களை மீள ஒழுங்கமைத்து மேம்படுத்துதல், பொது வெளியிடங்களை உருவாக்குதல் மற்றும் வாகனப்போக்குவரத்தை மேம்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கும்..


உப திட்டங்கள்

நகரின் முக்கிய பகுதிகளை துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கான மூலோபாயத்திட்டம், கட்டம்கட்டமான அணுகுமுறையொன்றைப் பயன்படுத்தி அமுல்படுத்துவதற்கான நகர தரமுயர்த்தல் தலையீடுகளை தெரிவு செய்வதற்கான அடிப்படையாக பயன்படுத்தப்பட்டது.


இவற்றுள் 1 வீதிகள் மற்றும் வாகனப்போக்குவரத்தை மேம்படுத்தல், 2. வடிகாலமைப்பை மேம்படுத்தல். 3. நகரதரமுயர்த்தல் மற்றும் கலாசார மரபுரிமைகள் .ஆகியன உள்ளடங்கும். முதலீடுகள் யாழ்ப்பாண மாநகர சபையின் அமுலாக்கல் ஆதரவு மற்றும் திறனை கட்டியெழுப்புதல் ஆகியவற்றுக்கான பிரிவொன்றையும் உள்ளடக்கும். இது மாநகர சபையின் மேம்பட்ட சேவைகளையும் புனரமைக்கப்பட்ட மற்றும் புதிதாக சேர்க்கப்பட்ட சொத்துக்களின் பராமரிப்பையும் உறுதி செய்யும்.

மேலும் படிக்க ...

அனுராதபுரம் ஒன்றிணைந்த நகர அபிவிருத்த் திட்டம் (AIUDP) முக்கிய நகரங்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒன்றிணைந்த நகர அபிவிருத்தி திட்டங்களுள் ஒன்றாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.


மேலும் படிக்க ...