ஹீல்பன் கந்துர மற்றும் ராஜாபிகில்ல புனரமைப்பு

கருத்திட்ட தகவல்

ஹீல்பன் கந்துர மற்றும் ராஜாபிகில்ல புனரமைப்பு


வகை

வடிகாலமைப்பு புனரமைப்பு


அமைவிடம்

கண்டி


நிறைவுறு ஆண்டு

2017


செலவு

இ .ரூ 31.00 மில்லியன்

விளக்கம்

நகரின் பிரதானமான வடிகாலமைப்பு உட்கட்டமைப்பு மற்றும் வெள்ளக்கட்டுப்பாட்டு முறைமை ஆகியவற்றின் மேம்பாட்டிற்காக ஹீல்பின்கந்துர மற்றும் ராஜாபிகில்ல புனரமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வுப கருத்தித்திட்டம் மழைநீரைக் காவிச்செல்வதை மேம்படுத்துமுகமாக தற்போதுள்ள மேற்பகுதி கால்வாயை புனரமைத்தல் மற்றும் மீள்வடிவமைத்தலையும் திடீர் வெள்ளத்தை கட்டுப்படுத்தலையும் உள்ளடக்குகிறது. ஒரே மாதிரியான இவ்வோடைகள் அவை சங்கமமாகும் கண்டி வாவியிலிருந்து மேற்புறமாக அமைந்துள்ளது. நீர் செங்குத்தான நிலத்தின் வழியே பாய்ந்தோடி குறுகலான கரைகளூடே கடந்து செல்கிறது. இது மழைக்காலங்களில் சில பகுதிகளில் நீரின் வேகம் மிக அதிகமாக இருப்பதற்கும் வெள்ளம் ஏற்படுவதற்கும் வழிவகுக்கின்றது.


உப கருத்திட்டம் இனங்காணப்பட்ட இடங்களைச் சுற்றியுள்ள சுமார் 55 குடும்பங்கள் மற்றும் ஒரு கிராமமான அடிப்படையில் மழை நீரினால் ஏற்படும் வெள்ளத்தை அனுபவிக்கும் 10 குடும்பங்கள் அடங்கலாக 350 பேருக்கு நேரடியாகப் பயனளிக்கும்.