மதில் மேல் நடைபாதை

மதிலின் மேல் உள்ள ஆகாய நடைபாதையின் புனரமைப்பு

விளக்கம்

மூலோபாய நகரங்கள் அபிவிருத்தி கருத்திட்டம் (SEDP) உலக வங்கியின் (WB) நிதி உதவியோடு நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், மற்றும் வடிகாலமைப்பு அமைச்சினால் தொடங்கப்பப்ட்டது. கண்டி மற்றும் காலி நகர அபிவிருத்தி கருத்திட்டங்கள் முன்னோடி நகரங்களாக கட்டம் 1 இன் கீழ் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. இரண்டு நகரங்களும் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்டுள்ளன. அங்கு குறைவடையா வளங்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலா வாசிகளை கவர்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. நகரின் புறநகர்ப் பகுதிகளில் வாழும் நாளாந்த அடிப்படையில் இந்நகரைப் பயன்படுத்தும் பிரசைகளினதும் தற்போதைய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் என்ற ரீதியில் SEDP திட்டமிடப்பட்ட அபிவிருத்தியை அடையும் அதேவேளை, உப கருத்திட்டங்களின் அமுலாக்கம் நகரத்திற்கு பெறுமதி சேர்தலில் கவனத்தைக் குவிக்கும்.
பாரிய காலி நகர அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (GGCDP) காலி நகரை தரமுயர்த்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள அதேவேளை, கருத்திட்ட நோக்கங்களில் கவனம் செலுத்துவதற்கு பல உப கருத்திட்டங்கள் இனங்காணப்பபட்டுள்ளன. காலி கோட்டை மதில்மேல் ஆகாய நடைபாதை GGCDPயின் கீழான உப கருத்திட்டங்களில் ஒன்றாகும். அது கோட்டையின் வரலாற்று, கலாச்சார மற்றும் எழில்மிகு காட்சி ஆகியவற்றின் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா வாசிகளை கவரந்திழுக்கும்.