நீர்த் தேக்கங்கள்

ஹீரஸ்ஸகல மத்தி, கீழ் ஹீரஸ்ஸகல மற்றும் தங்கொல்ல ஆகிய இடங்களில் மூன்று நீர்த்தேக்கங்கள் (நீர் சேகரிப்பு குளங்கள்) நிர்மாணித்தல்.

விளக்கம்

உத்தேச அபிவிருத்திக் கருத்திட்டம் ஹீரஸ்ஸகல மத்தி, கீழ் ஹீரஸ்ஸகல ஆகிய இடங்களில் இரண்டு புதிய நீர் ( தேக்கங்கள்/சேகரிப்பு குளங்கள்) நிர்மாணித்தல் மற்றும் தற்போதிருக்கும் தங்கொல்ல சேகரிப்புக் குளத்தின் கொள்திறனை விரிவுபடுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கும். ஹீரஸ்ஸகல மத்தி மற்றும் கீழ்ப்பிரிவு ஆகியவற்றில் நீர்த்தேக்கங்கள் நிர்மாணிப்பதற்கான காணிகளை இனங்காணுதல் NWS&DB க்கு உரியதாகும் என்பதோடு ஏற்கனவே அவை தமது சம்மதத்தை வழங்கியுள்ளன. தங்கொல்ல நீர்த்தேக்கத்தின் விரிவாக்கல் வேலைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள காணி கண்டி மாநகர சபைக்குரிய ஒரு சொத்தாகும். தற்போது அங்கு கண்டி மாநகர சபைக்குச் சொந்தமான ஒரு நீர்த்தேக்கம் இருக்கின்ற அதேவேளை, அதே இடத்தில் புதிய நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பபட்டு வருகின்றது. எனவே, இம்மூன்று நீர்த்தேக்கங்களின் நிர்மாணத்திற்கு தேவையான காணி அரசாங்கச் சொத்தாக இருப்பதனால், காணி உரித்து உறுதிப்படுத்தப்படும் அதேவேளை தனியார் காணிகள் எதுவும் சுவீகரிக்கப்படமாட்டாது. திட்டமும் மதிப்பீடும் NWS & DB இனால் தயாரிக்கப்பட்டுள்ளதோடு, நடத்துத பராமரிப்பும் இக்கருத்திட்டம் ஒப்படைக்கப்பட்டதும் காணி கண்டி மாநகர சபையினால் மேற்கொள்ளப்படும்.