கண்டி வாவியின் அழுக்குத்தடுப்புக்களை புனரமைத்தலும் நிர்மாணித்தலும்

கருத்திட்ட தகவல்

கண்டி வாவியின் அழுக்குத்தடுப்புக்களை புனரமைத்தலும் நிர்மாணித்தலும்


வகை

வடிகாலமைப்பு புனரமைப்பு


அமைவிடம்

கண்டி


நிறைவுறு ஆண்டு

2017


செலவு

இ .ரூ 134.10 மில்லியன்

விளக்கம்

தற்போதுள்ள அழுக்குத்தடுப்புக்களை புனரமைத்தல் மற்றும் மீளவடிவமைத்தல் மற்றும் அழுக்குப்படிவு அகற்றுதலுக்கான மேலும் சிறந்த வசதிகள் கொண்ட மேலதிக அழுக்குத்தடுப்புகளை நிர்மாணித்தல் ஆகியவற்றை உள்ளடக்கும் ஓர் உப கருத்திட்டம் இனங்காணப்பட்டுள்ளது. அது ஓடை மேற்பகுதி அழுக்குதடுப்புகளின் புனரமைப்பு மற்றும் நிர்மாணம் ஆகியவை அடங்கலான நகரின் பிரதான வடிகாலமைப்பு உட்கட்டமைப்பு மற்றும் வெள்ளலக்கட்டுப்பாடு முறைமை ஆகியவற்றை மேம்படுத்தும் பல பாரிய முதலீடுகளில் ஒன்றாகும்.


இக்குறிப்பிட்ட உப கருத்திட்டத்தின்கீழ், பின்வரும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது:


• • தற்போதுள்ள 2 அழுக்குத்தடுப்புகள் ( கீழ் மஹாமாய மற்றும் கீழ் செம்மதகு ) புனரமைப்பு

• • 3 அழுக்குத் தடுப்புகளை நிர்மாணித்தல் ( மேல் செம்மதகு, மேல் ஹில்ஆட்ஸ் மற்றும் மேல் மஹாமாய)


மேல்குறிப்பிட்ட கட்டமைப்புகள் அளவில் சிறியவை என்பதோடு, மூன்று கி.உ.பி களின் கீழ் வரும் ஐந்து வெவ்வேறு இடங்களில் உள்ளன.


உப கருத்திட்டங்கள் குறிப்பாக இனங்காணப்பட்ட அழுக்குதடுப்புகளின் அமைவிடங்களைச் சுற்றியுள்ள மொத்தம் 370 பேர் மற்றும் சுற்றுலாவாசிகள் அடங்கலாக நகருக்கு வரும் ஒரு மதிப்பிடப்பட்ட 350,000 பிரயாணிகள் அடங்கலாக மொத்தம் 108,000 நகர மக்கள் தொகையினருக்குப் பயனளிக்கும். மாவட்டத்தின் 1.37 மில்லியன் மக்கள் தொகையினர் மறைமுகமாகப் பயன் பெறுபவர்களுள் அடங்குவர். பயன்பெறும் மக்கள் தொகையினர் பல்லின, பல்மதம் சார்ந்தவர்களாவர்.