நீர் கடத்தல் குழாய்

ஹீரஸ்ஸகல வீதி நெடுக WTP யிலிருந்து ஹீரஸ்ஸகல சந்திவரையிலான நீர் கடத்தல் குழாய்

விளக்கம்

கண்டி மாநகரசபை பகுதி நீர்வழங்கல் திட்டங்களின் புனர்நிர்மாணம் மற்றும் புனரமைப்பு தற்போது கண்டி மாநகரசபையினால் இயக்கப்பட்டு முகாமைத்துவப் படுத்தப்பட்டும் திட்டங்களின் தற்போதைய கொள்திறனை விரிவாக்குதல் ஆகியன SCDP விற்கு வழங்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட குறிக்கோள்களை அடையுமுகமாக, இக்கருத்திட்டம் (SCDP ) கெட்டெம்பேவில் அமைந்துள்ள நீர் சுத்திகரிப்புப் பொறியிலிருந்து ஹீரஸ்ஸகல சந்திவரை புகையிரதக்கடவையூடாக நீர் கொண்டுசெல்லும் குழாய் இடுவதற்கும் ஹீரஸ்ஸகல கிராம உத்தியோகத்தர் பிரிவின் கீழ் ஹீரஸ்ஸகல வீதி ஓரமாக நிர்மாணிக்கப்படவுள்ள நீர்த்தேக்கத்தோடு இக்குழாய்களை இணைப்பதற்கும் முன்மொழிகிறது. இன்னொரு நீர்க்குழாய் ஹீரஸ்ஸகல கீழ்ப்பிரிவு நீர்த்தேக்கத்திலிருந்து ஹீரஸ்ஸகல கி.உ.பி. வின் நடுப்பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள நீர்த்தேக்கத்திற்கு இடப்படும். இதனிடையே, ஹீரஸ்ஸகல மத்திய மற்றும் கீழ்ப்பிரிவு நீர்தேக்கங்களிலிருந்து வரும் நீர்குழாய்களுக்குச் சமாந்தரமாக ஹீரஸ்ஸகல வீதி நெடுக ஹீரஸ்ஸகல சந்திவரை விநியோககுழாய் ஒன்று பொருத்தப்படும்.


கெட்டேம்பேயில், கெட்டேம்பே சந்தியிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மாவத்தையின் இடது புறத்தில் அமைந்துள்ள நீர் சுத்திகரிப்பு பொறிதான் (WTP) கண்டி மாநகர சபையின் பிரதான நீர் சுத்திகரிப்பு அலகாகும். இது 1956 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதோடு, காலத்திற்கு காலம் புனரமைப்பிற்கு உட்பட்டுள்ளது. WTP யின் தற்போதைய கொள்திறன் 35,000 கன மீற்றராகும். WTP கட்டப்பட்டுள்ள அரை ஏக்கர் காணி கண்டி மாநகர சபைக்கு உரியதாகும். ஹீரஸ்ஸகல கீழ்ப்பிரிவு ஹீரஸ்ஸகல வீதியின் இரண்டாவது ஒழுங்கையிலிருந்து 220 மீற்றர் தூரத்தில் கடல் மட்டத்திலிருந்து 561 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளது. ஹீரஸ்ஸகல மத்திய பிரிவு ஹீரஸ்ஸகல வீதியின் மூன்றாவது ஒழுங்கையிலிருந்து 150 மீற்றர் தூரத்தில் கடல் மட்டத்திலிருந்து 613 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளது. WTP யிலிருந்து ஹீரஸ்ஸகல சந்தி வரையிலான அதன் நீளம் 1,260 மீற்றராக இருக்க, ஹீரஸ்ஸகல சந்தியிலிருந்து நீர்த்தேக்கம் வரையிலான அதன் நீளம் 1444 மீற்றராகும். உத்தேச அபிவிருத்தி கருத்திட்டம் இரண்டு உட்கூறுகளை கொண்டுள்ளது. அதாவது கெட்டெம்பேயிலுள்ள நீர் சுத்திகரிப்பு பொறியிலிருந்து புகையிரதக்கடவை ஊடாக ஹீரஸ்ஸகல சந்திவரையும் பின்னர் அதிலிருந்து முதலில் ஹீரஸ்ஸகல தேக்கத்திற்கு குழாயை இடுவது மேலும், இரு நீர்த்தேக்கங்களிலுமிருந்து வரும் நீர் குழாய்க்குச் சமாந்தரமாக ஹீரஸ்ஸகல சந்திவரை ஒரு விநயோககுழாய் இடப்படும். WTP யிலிருந்து ஹீரஸ்ஸகல சந்திக்கான நீர்க்குழயை வீதியின் வலது புறத்தில் உள்ள நடைபாதைக்கு கீழே இடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஹீரஸ்ஸகல சந்தியிலிருந்து ஹீரஸ்ஸகல வீதி நெடுகிலும் நீர்த்தேக்கங்களை வரை நீர் கொண்டு செல்லும் குழாய்களும் வீதியோரக்குழாய்களும் இடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.