வீவிங் டெக்

ஆத்தஸ் சீட் வீவிங் டெக்

திட்டம் தெரிவிப்பு

ஆத்தஸ் சீட் வீவிங் டெக்


வகை

நகர தரமுயர்த்தல்


அமைவிடம்

கண்டி நகரம்


ஆண்டு முழுக்க .

2017


பெருமானம்

இ .ரூ 44.5 மில்லியன்

விளக்கம்

கண்டி நகரிலுவுள்ள ஆர்த்தர் சீட் வடக்கே தாது நினைவுச் சின்ன கோயிலுக்கும் தெற்கே செனனாய் ரெஸ்ட்டிற்கும் (ஓர் பயணிகள் விடுதி) கிழக்கே ஹில் வூட் மகளிர் கல்லூரிக்கும் மேற்கே சாலிக்கா இன்னிற்கும் (ஓர் பயணிகள் விடுதி) இடையே வேல்ஸ் பார்க் சந்தியிலிருந்து அம்பிட்டிய சந்தியில் வாவியைச் சுற்றிய வீதி வரை ராஜபிகில்ல மாவத்தை நெடுக 200 மீற்றரில் கடல் மட்டத்திலிருந்து 1970 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இக்காட்சி மையம் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இனங்காணப்பட்டது. கதைகளின் படி, ஒரு தோட்டத்துரையான ஆர்த்தருக்கு சொந்தமான பங்களா ஒன்று இருந்துள்ளது. இத்துரை தனது பங்களாவிற்கு முன்னே இருந்த ஒரு மரத்தின் கீழ் காணப்பட்ட கல்லிலான இருக்கையின் மேல் நின்றாவது கண்டி நகரை பார்த்து ரசிப்பது வழக்கமாகவிருந்தது. தற்போது அப் பங்களா திரு. ஒபேசேகர என்ற ஒருவருக்குச் சொந்தமாக உள்ளது. ஆர்த்தர் நகரைப் பார்த்து ரசிப்பதற்கு பயன்படுத்திய இடம் உள்ளூர் மற்றும் சர்வதேச வருகை தருவோருக்கு ஒரு பார்வையிடும் மையமாக தற்போது பயன்படுத்தப்படுகின்றது. தற்போது அவ்விடம் வருகை தருவோர் பேமண்டின் மேலே நின்று பார்வையிடும் மையமாகத் விளங்குகின்றது. ஒரு அடையாளச்சின்னமாக விளங்கும் கல்லினால் செய்யப்பட்ட கதிரையொன்று புகைப்படமெடுப்பதற்காக வருகை தருவோரினால் பயன்படுத்தப்படுகின்றது.


ஆர்த்தர் சீட் பார்வையின் பெறுமதி சுற்றுலா கவர்ச்சி சார்ந்ததாகும். அங்கிருந்து பார்க்கும் போது பகலிலோ இரவிலோ கண்டி நகரம் கண்கொள்ளாக் காட்சியாக தோன்றுகிறது. அது கண்டி வாவி, தளதா மாளிகை மற்றும் திருகோணமலை வீதி ஆகியவற்றின் அற்புதமான தோற்றத்தையும் வழங்குகின்றது.