துனுமடவள நீர் சுத்திகரிப்புப் பொறி

துனுமதலாவ நீர் வளங்கள் திட்டத்தை புனரமைத்தலும் மேம்படுத்தலும்

விளக்கம்

கண்டி மாநகர நீர் வளங்கள் முறைமை மேம்படுத்தல் மற்றும் புனரமைப்பு உப கருத்திட்டம் வழங்கலை அதிகரிக்கவும் சுத்திகரிப்பையும் சேமித்து வைத்தலையும், மேம்படுத்தவும் தெரிவு செய்யப்பட்ட இணைப்புகள் பம்பிகள் மற்றும் விநியோக குழாய்களில் NRW வை மதிப்பிடப்பட்ட 40% முதல் 50% வரை குறைக்கவும் கெட்டெம்பே மற்றும் துணுமடவிலே ஆகிய இடங்களில் உள்ள உட்கொள்ளல் மற்றும் சுத்திகரிப்பு பொறிகளை புனரமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற குறிக்கோள் முறைமையின் வினைத்திறனை மேம்படுத்துவதாகும். இதற்கென கருத்திட்ட வடிவமைப்பில் கட்டமைப்பு சாராத நடவடிக்ககைகள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. உத்தேச சுத்திகரிப்பு நடைமுறை காற்று உட்புகவைத்தல், உறைய வைத்தல், புலெக்குலோஷன், துகளகற்றல், வடித்தல் மற்றும் தொற்று நீக்கல் ஆகியவற்றை உள்ளடக்கும். உப கருத்திட்டத்தின் ஒட்டுமொத்த குறிக்கோள் நீரின் தரத்தை மேம்படுத்துவதும் அளவை அதிகரிப்பதும், நகருக்கு வருகை தரும் மக்கள் அடங்கலாக சேவைப்பகுதியில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதிப்படுத்துவதுமாகும். இதன் பயன்பெறும் மக்கள் பல்லின பல்மதம் சார்ந்தவர்களாவர். இத்திட்டம் பராமரிப்பு வசதிகளையும் உள்ளடக்கும்.


துணுமடவில உப கருத்திட்டம் வேல்ஸ் பார்க் சந்திக்கு கிட்டத்தட்ட 500 மேற்கே அமைந்துள்ளது. இவ்வமைவிடம் ஏற்கனவே தற்போதைய நீர்வழங்கல் சாலைக்கான அமைவிடமாகும். நீர் சுத்திகரிப்புப் பொறி (WTP) மற்றும் உத்தேச சகதி சுத்திகரிப்புப் பொறி (STP) ஆகியன E-80.63759 மற்றும் ன்-7.284540 ஆகிய இடங்களில் 550 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளன. பாதுகாப்பான குடிநீரின் MSL வழங்கல் பெறுபேறுகளை மேம்படுத்தப் பங்களிப்பு செய்யும். மேலும், நீரினால் ஏற்படும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுவதால் நேரமும் பணமும் மிச்சப்படுவதன் மூலம் மேம்பட்ட வாழ்வாதார வாய்ப்புகளும் சுகாதார பிரச்சினைகளற்ற தொழில்களும் கிடைக்கும். குறிப்பாக வறிய குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகளும் பெண்களும் பயனடைவர். எனவே இவ்வுப கருத்திட்டம் வறுமைக் குறைப்பிற்கு பங்களிப்பு செய்யும். சகதி சுத்திகரிக்கப்பட்டு, உலர வைக்கப்பட்டு கொககோட காணி நிரப்புதல் இடத்தில் போடப்படுவதாலும் தூயநீர் திரும்பவும் துணுமடவில ஓடைக்கு விடப்படுவதாலும் சூழலுக்கான அபிவிருத்தியும் வந்து சேருவதோடு, அது மாசுறுதலைக் கட்டுப்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்யும்.